Saturday, April 20, 2013

சில தினங்களுக்கு முன் இலங்கை இன படுகொலை  ஓட்டு  தீர்மானம் நிறைவேற்ற வேண்டி மாணவர்கள்  போராட்டம் நடத்தியது அனைவருக்கும் தெரிந்த ஒன்று ! நான் அதனை பற்றி பேச வரவில்லை.அந்த சமயத்தில் நான் பயணம் செய்த பேருந்து பற்றி தான்

என்னடா பில்டப்  கொடுக்கிறேன் பார்க்காதீங்க.சரி பஸ்ல போகிறப்ப  நடுவுல ஏதும்  பசிக்கும்னு தாம்பரத்திலே   எல்லாம் வாங்கிட்டு  போனேன் .கையிலே 450 ரூபா இருக்கு இந்த ஊருக்கு போகுமானு {சாரி  எங்க ஊர் பெயர் குறிப்பிடல } கேட்டேன் ,போகும்னு 350 ரூபா வாங்கி பஸ்ல ஏறிட்டேன்

நல்ல தூக்கம்,ஊருக்கு போகிறோம் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சிகிட்டு இருக்கிறப்போ வந்துச்சு ஒரு பிரேக் "திருச்சி மாநகராட்சி" உங்களை அன்புடன் வரவேற்கிறது -னு ஒரு போர்டு.எல்லாரும் டிக்கெட் கொடுங்க, உங்களுக்கு வேற பஸ் வருது -னு டிக்கெட்டை  வாங்கிட்டாங்க .

என்னோட இன்னும் ஒரு 8 பேரு வந்தாங்க , எல்லாரும்  வேற வேற ஊரு கூடவே எங்களோட ஒரு நாலு ஆட்களை அனுப்பு -னாங்க  . இதான்  உங்க ஊருக்கு போகிற பஸ் , சீக்கிரம் ஊர் போய் சேருங்க  -ன்னு  சொன்னாங்க

அப்ப என் 350  ?     போச்சா  -ன்னு  நினைச்சிகிட்டு இருக்கிறப்போ , இதையெல்லாம் யாரிடமாவது  சொன்னா   அவர்களாவது ஏமாறாம இருப்பாங்க -னு தான், நான்  இந்த முதல் பதிவை இடுகிறேன் ...


அடுத்த பதிவு  ... எனக்கு  தெரிஞ்சா  இடுகிறேன்